தலையில்லாமல்
நடந்துவரும் சிறுமி:
உலகம்
முழுவதும் வைரலான வீடியோ
தலையில்லாத முண்டத்துடன் சிறுமி ஒருவர், கையில் தலையைப்
பிடித்தவாறு நடந்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலோவீன் தினத்தைக்
கொண்டாடும் வகையில் சிறுமியின் தாய் இந்தத் தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்கா, அயர்லாந்து, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் அக்டோபர் 31-ம் திகதியை
ஹாலோவீன் தினமாகக் கொண்டாடுகின்றன. ஹாலோவீன் தினம் என்பது அகாலமாக
மரணமடைந்தவர்களின் ஆவிகளைச் சந்தோஷப்படுத்த எண்ணி மேற்கத்தியர்கள் கொண்டாடும்
நாளாகும்.
இந்நாளில் குழந்தைகள் விதவிதமான பேய்களின் உருவங்களில் மற்றவர்களை
பயமுறுத்துவர். எலும்புக்கூடு உருவம், கண், வாயில் ரத்தம் ஒழுகும் உருவங்கள், கை கால்
விரல்களில் நீண்ட நகங்கள், சூனியக்காரர்கள் என விதவிதமான வடிவங்களில்
கொண்டாடி மகிழ்வர். அந்தக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நேற்று முன் தினம் (அக்.31) உலகம் முழுவதும் ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்ட
நிலையில் அதற்காகத் தன் மகளை வித்தியாசமாக அலங்கரிக்க முடிவெடுத்தார்
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த கிறிஸ்டல் ஹேவாங்.
தனது 2 வயது மகள் மாயாவுக்கு தன் தலையைத் தானே வெட்டி
கையில் எடுத்துக்கொண்டு நடக்கும் வகையில் மேக் அப் மூலம் வித்தியாசமான தோற்றத்தை
உருவாக்கினார். அவருடன் 6 வயது மகள் சாராவை நடக்க வைத்தார்.
அதை அப்படியே வீடியோவாக எடுத்த கிறிஸ்டல், வீடியோவைத் தன்
ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். தலையில்லாமல் நடக்கும் சிறுமியின் வீடியோவை
ஏராளமான ஊடகங்கள் செய்தியாகவும்,
வீடியோவாகவும்
வெளியிட்டன.
இதைத் தொடர்ந்து அந்த வீடியோ ஜப்பான், இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா என உலகம் முழுவதும் வைரலாகி உள்ளது.
0 comments:
Post a Comment