அடுத்தாண்டு ஜனவரி 5ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல்
புதிய நாடாளுமன்றம் ஜனவரி 17ம் திகதி பதவியேற்கும்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 5ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி அதிரடியாக ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்தார். ஆனால் ரணில் விக்ரமசிங்க, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.
இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்கிறது. ரணில் விக்ரம சிங்க பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
நாடாளுமன்றத்தை
16 ஆம் திகதி வரை முடக்கி வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். இதற்கிடையே, பாராளுமன்றம் 14 ஆம் திகதி கூடும் என அவர் அறிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 5ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய நாடாளுமன்றம் ஜனவரி 17ம் திகதி பதவியேற்கும் என அறிவிப்பு வெளியாகியுள்லது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளாது பொது தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அதற்கான அரச வர்த்தமானியும் வெளியாகியுள்ளது.
.
எனினும், உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளாது பொது தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
.

0 comments:
Post a Comment