நாடாளுமன்றம் கலைப்பு
– அமெரிக்கா ஆழ்ந்த கவலை
நாடாளுமன்றத்தைக்
கலைக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு
குறித்து, அமெரிக்கா
ஆழ்ந்த கவலை
வெளியிட்டுள்ளது.
அமெரிக்க
இராஜாங்கத் திணைக்களத்தின் டுவீட்டர் பக்கத்தில், இதுதொடர்பான
பதிவு ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
“ இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதான
செய்தி குறித்து
அமெரிக்கா ஆழ்ந்த
கவலையடைகிறது. இது அரசியல் நெருக்கடியை மேலும்
மோசமடையச் செய்யும்.
இலங்கையின்
அர்ப்பணிப்புள்ள பங்காளர் என்ற வகையில், உறுதிப்பாட்டையும்
செழிப்பையும் உறுதி செய்வதற்கு, ஜனநாயக அமைப்புகளும்,
செயல்முறைகளும் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்று
நாங்கள் நம்புகிறோம்.”
என்று கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment