நாடாளுமன்றம் கலைப்பு
– என்ன சொல்கிறார்கள் இவர்கள்…?
ரில்வின் சில்வா (ஜேவிபி) –
ஜனாதிபதி இரண்டாவது தடவையாக அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் தேவையான 113 பெரும்பான்மை பலம் கிடைக்காததால் தான் அவர் இதனைச் செய்துள்ளார்.
இதன் மூலம் அவர் நாட்டைப் படுகுழிக்குள் தள்ளி விட்டுள்ளார். நாட்டில் முதல் முறையாக, ஜனாதிபதி ஒருவர், நாட்டின் அரசியலமைப்பை மீறி தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்ப்போம்.
குசல் பெரேரா (அரசியல் ஆய்வாளர்) –
இலங்கை அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான ஜனநாயக விரோதச் செயல்களின் ஆகப் பிந்திய நடவடிக்கை தான், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் செயல்.
இந்த அரசியலமைப்பு மீறல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது.
எமக்கு நல்லாட்சி தேவையென்றால், ஜனநாயகத்தை நிறுவி அதனைப் பலப்படுத்த வேண்டும்.


0 comments:
Post a Comment