கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில்
குடிநீரை மக்களுக்கு தற்காலிகமாக பெற்றுக்
கொடுக்கப்பட்டதாக வெளியான
செய்தியை ஆதாரங்களுடன் மறுப்பு
பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி
மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் எனவும்
முகாமைத்துவக் குழுவினர் வேண்டுகோள்

கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இடைநிறுத்தப்பட்ட குடிநீரை மக்களுக்கு தற்காலிகமாக மீண்டும்  பெற்றுக் கொடுக்கப்பட்டதாக வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் எனவும் கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் கேட்டுள்ளனர்.
இன்று 21ஆம் திகதி கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இது குறித்து தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,

கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் 438 குடும்பங்கள் வாழ்கின்றநர். இந்த மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை கடந்த 15.11.2018 திகதியில் இருந்து நிறுத்தியமைக்காக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

குறித்த குடிநீரை அம்மக்கள் பயன்படுத்தியதற்கு அமைய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய ரூபா 921036/- செலுத்தப்படாமையால் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களுக்கும் மேலாக அங்கு வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகினர்.

இதற்கு காரணம் கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தின் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த கல்முனை கிறீன்பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவினர் அங்கு வாழும் மக்கள் குடி நீர் பட்டியலுக்கு செலுத்திய பெருந்தொகை பணத்தை கையாடல் செய்துள்ளமையும் திடிரென அக்குழு செயலிழந்தமையும் ஆகும் என பாதிக்கப்பட்ட அம்மக்கள் குற்றம் சுமத்துவதோடு மேற்குறித்த ஆதன முகாமைத்துவக் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

இதற்காக தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் என மீண்டும் ஒரு புதிய அமைப்பினை உருவாக்கி  குறித்த பிரச்சினையை ஆராய்ந்து இன்று(21) முதல் கட்டமாக மீண்டும் மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொள்வதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் (ரூபா 921036/- யும்) செலுத்த புதிய இக்குழு மக்கள் ஆதரவுடன் தற்போது களமிறங்க முடிவு செய்துள்ளது.

இதன் படி அவ்வீட்டு திட்டத்தில் உள்ள 430 குடும்பங்களிடம் தலா 2500 ரூபா வீதம் வசுலித்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் (ரூபா 921036/- யும்) உடனடியாக மீள்செலுத்த குறித்த தற்காலிக குழு நாளை(22) இரவு 9 மணிக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது.     
எனவே, பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் என கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் கேட்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top