அரசியல் சதிக்கு
எதிர்ப்புத் தெரிவித்து
வண.தம்பர அமில
தேரர் சத்தியாக்கிரகப்
போராட்டத்தை
ஆரம்பித்தார்
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர்
மஹிந்த ராஜபக்ஸ
ஆகியோரின், அரசியலமைப்புக்கு எதிரான, அரசியல் சதிக்கு
எதிர்ப்புத் தெரிவித்து வண.தம்பர அமில
தேரர்
சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
கொழும்பில்,
விகாரமாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு
எதிரே, தம்பல
அமில தேரர்
சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்தப்
போராட்டத்தில், சிவில் சமூகத்தினர், வணிகப் பிரதிநிதிகள்
உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
“சர்வதேச
நாடுகள் உங்களது
நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் மாலைதீவு
, சுவாசிலாந்து நாடுகள் கூட இதனை ஏற்குமோ
தெரியாது. நாட்டில்
நீதி நிலைநாட்டப்பட
வேண்டும்.
அதற்காகவே சதியாக்கிரகத்தில் இறங்குகிறோம்.”
சத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்க முன்னர் வண. தம்பர
அமில தேரர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை,
தனது பெயரில்
போலியான முகநூல்
கணக்கு ஒன்று
ஆரம்பிக்கப்பட்டு பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வண.தம்பர அமில
தேரர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment