ஜனநாயகத்திற்கு முரணான 
சதித்திட்டங்களை தோற்கடிக்க
ஜேவிபிகூட்டமைப்பு இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, ஜேவிபி அனுரகுமார திசநாயக்க ஆகியோருக்கிடையிலான நேற்று பிற்பகல் 3 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரனும், ஜேவிபி சார்பில் பிமல் ரத்நாயக்க , கே.டி.லால் காந்த  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனுரகுமார திசநாயக்க,

கடந்த 26 ஆம் திகதி நாட்டில் நடந்தது அரசியல் ரீதியிலான சதித்திட்டமாகும். ஒரு சூழ்ச்சித் திட்டத்தின் மூலமாக புதிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கோ அல்லது அரசாங்கத்தினைக் கவிழ்ப்பதற்கோ நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஜனநாயக மீறல்கள் காரணமாக நாட்டு மக்கள் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மக்களும், அரசியலில் ஈடுபடுபவர்கள் என்ற வகையில் நாங்களும் ஜனநாயக மீறலின் காரணமாக ஏற்படத்தக்க பின்விளைவுகளுக்கு முகங்கொடுத்திருந்தோம்.

எனவே ஜனநாயகம் எங்கே கேள்விக்குரியதாக்கப்பட்டாலும், எவ்வித செயற்பாடுகளால் ஜனநாயகம் பாதிப்பிற்கு உட்பட்டாலும் அப்போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு முன்னிற்க நாம் தயாராகவுள்ளோம்.

ஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பாக எமக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுஎன தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top