வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள
விசேட ஜனாதிபதி செயலணி
இன்று ஒன்று கூடல்
வடக்கு,
கிழக்கு மாகாணங்களின்
அபிவிருத்திக்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி நான்காவது
தடவையாக இன்று
(08) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்
ஜனாதிபதி அலுவலகத்தில்
ஒன்று கூடியது.
எதிர்க்கட்சித்
தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா,
கிழக்கு மாகாண
அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்
உள்ளிட்ட மக்கள்
பிரதிநிதிகளும் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்களும்
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன
உள்ளிட்ட அமைச்சுக்களின்
செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த
நிகழ்வில் கலந்துகொண்டனர்.


0 comments:
Post a Comment