சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்
ஜனாதிபதியிடம் .நா பொதுச்செயலர் கண்டிப்பு



இலங்கையில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், .நா பொதுச் செயலாளலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதிக்கும், .நா பொதுச்செயலாளருக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலின் போதே, .நா பொதுச் செயலாளர் இதனை வலிறுத்தியிருக்கிறார்.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக .நா பொதுச்செயலாளரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நவம்பர் 1ஆம் திகதி, ஐ்நா பொதுச்செயலாளர் தொலைபேசி மூலம் பேசினார்.

இலங்கையின் தற்போதைய நிலவரங்களை தான்  கவலையோடு கவனித்து வருவதாகவும், இந்த நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண அனைத்து தரப்புகளுடனும்,  பேச்சுக்களை நடத்த ஏற்பாடு செய்வதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும், இலங்கை ஜனாதிபதிக்கு, .நா பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

அமைதி, பாதுகாப்பை உறுதி செய்கின்ற சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற, அரசாங்கத்தின் பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற நடைமுறைகளை மாற்றியமைத்து, கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதியிடம், .நா பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டார்.

.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களின் அடிப்படையில்,  மனித உரிமைகள், நீதி, நல்லிணக்கம் தொடர்பாக முன்னைய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதை ஊக்குவிப்பதாகவும், .நா பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்என்று கூறப்பட்டுள்ளது,





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top