ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்
எம்.பிக்களுக்கு பதவிகள் வழங்கப்படவில்லை!
வெளிப்படும் சதித்திட்டம்
எதிர்வரும்
7ஆம் திகதி
நாடாளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,
மக்களுடன் இணைந்து
நாடாளுமன்றத்தை கைப்பற்ற நேரிடும் என ஐக்கிய
தேசியக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா
தெரிவித்துள்ளார்.
அலரி
மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சநதிப்பில்
அவர் இதனை
கூறியுள்ளார்.
மேலும்
தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை சேர்ந்த
எந்த நாடாளுமன்ற
உறுப்பினர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்படவில்லை.
வேறு
கட்சிகளில் இருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே
அமைச்சர் பதவிகள்
வழங்கப்படுகின்றன.
இந்த
நடவடிக்கையானது ஏதோ ஒரு சதித்திட்டம் இருப்பதை
காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு
விரோதமாக மேற்கொள்ளப்பட்டு
வரும் இந்த
நடவடிக்கைக்கு எதிராக மக்கள் செயற்படுவார்கள்.
மக்களுடன்
இணைந்து நாடாளுமன்றத்தை
கைப்பற்றும் நடவடிக்கையில் ஏதேனும் தவறு நடந்தால்,
அதற்கான பொறுப்பை
நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ள அனைவரும் ஏற்க வேண்டும்
எனவும் அஜித்
பீ. பெரேரா
குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment