சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள்
புகுந்த வன்முறையாளர்கள்:
பாதுகாப்பு வழங்கியுள்ள அதிரடிப்படை



வன்முறையாளர்கள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் புகுந்து அங்குள்ள வழக்கு ஆவணங்களை எடுத்துச் செல்ல முயற்சித்தன் காரணமாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய திணைக்களத்திற்கு அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் குழப்ப நிலை காரணமாக தான் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாக சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்புக்காக நேற்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை நிறுத்தியுள்ளதாக அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம். லத்தீப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான பலருக்கு எதிராக பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழக்குகளின் ஆவணங்களை எடுத்துச் சென்று அழிக்கும் நோக்கில், மேற்படி குழுவினர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலைமை காரணமாக தனக்கும் திணைக்களத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top