பீஜிங்கில் இம்ரான் என்ற வாசகத்துக்குப் பதிலாக
‘பெக்கிங்கில் இம்ரான் கான்’
- பாக். தொலைக்காட்சி செய்த தவறு
பாகிஸ்தான் அரசுத் தொலைக்காட்சி, சீனா சென்றுள்ள பிரதமர் இம்ரான்
கான் பற்றிய செய்தி அறிக்கையில் பீஜிங்கில் இம்ரான் கான் என்பதற்குப் பதிலாக பெக்கிங்கில்
இம்ரான் கான் என்று காட்டியது வசமான கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்
கான். அவர் பேசுவது பற்றிய நேரலையை ஒளிபரப்பிய பாகிஸ்தான் அரசுத் தொலைக்காட்சியான பிடிவி பீஜிங்கில் இம்ரான் என்ற வாசகத்துக்குப் பதிலாக
‘பெக்கிங்கில் இம்ரான் கான்' (Imran Khan in
"Begging") என்ற வாசகத்துடன் செய்தி ஒளிபரப்பியது. இது 20 விநாடிகளுக்கே
நீடித்தது, ஆனாலும் சிலரின் கண்களிலிருந்து தப்பவில்லை. பிறகு தவறு
திருத்தப்பட்டது வேறு கதை. இதற்கு வருத்தமும் தெரிவித்தது பிடிவி.
ஆனால் நெட்டிசன்களிடம் சிக்கினால் விடுவார்களா, ஒரு சிலர் ‘மிகவும்
மோசமானது, இழிவானது’ என்று இதனைத் தாக்க மற்றவர்கள் அடேடே
பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு இவ்வளவு சுதந்திரமா? என்று கடும் கேலியில் இறங்கினர்.
இன்னும் ஒரு சிலர் இது வேண்டுமென்றே இம்ரான்கானை இழிவுபடுத்தும்
செயல் என்று கருதி பதிவிட்டுள்ளனர்.
தற்போது இந்தத் தவறுக்கு யார் பொறுப்பு என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment