பொது வேட்பாளராகப் போட்டியிட்டு
 வெற்றி பெற்ற ஜனாதிபதி
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன்
இணைந்து செயல்படுபவர்களுக்கு
அமைச்சுப் பதவிகளை எப்படி வழங்க முடியும்?
அரசியல் விமர்சகர்களும் புத்திஜீவிகளும் கேள்வி

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியையும் சாந்திராமல் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு சிறுபாண்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களின் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த பொதுத் தேர்தலில் நாட்டு மக்களின் விருப்பத்தை பெற்றிராத ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணைந்து தற்போது செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர் பதவிகள் வழங்குவது  எந்த வகையில் நியாயம் என அரசியல் விமர்சகர்களும் புத்திஜீவிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஸ 5,768,090 (47.58%) வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இதேபோன்று பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலில் போட்டியிட்டு 5,098,916 (45.66%) வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு 4,732,664 (42.38%) வாக்குகளையும் பெற்றிருந்தன.
ஆனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆணையைப் பெற்றிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பாக மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என ஒரு கட்சியில் இணைந்து செயல்படுகின்றார்கள்.
இப்படி மக்கள் ஆணையைப் பெற்ற  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலிருந்துஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனயில் இணைந்து மக்கள் ஆணைக்கு மாறாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியையும் சாந்திராமல் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கெளரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளை எப்படி வழங்க முடியும் என்ற கேள்வி புத்திஜீவிகளால் எழுப்பப்படுகின்றது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top