ஜனவரி ஐந்தில் தேர்தல் –
வேட்பு மனுவுக்கான திகதியும் வெளியாகின??
நாடாளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில், வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல் பொதுத் தேர்தல்
நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய லங்கா நியூஸ்க்கு
தெரிவித்திருப்பதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment