ஜனாதிபதியின் நிலைப்பாடு
எப்படியிருக்கிறது
மனோ கணேசன் இப்படிச்
சொல்கின்றார்.
‘நீங்கள் தலையிடுங்கள்’
என என்னிடமும், ரிசாத்திடமும்
ஜனாதிபதி சொன்னார்.
பாராளுமன்றத்தில்
அசம்பாவிதம் நிகழ்ந்தால், சரித்திரம் உங்களை பொறுப்பாளியாக்கும்’ நேற்றைய சர்வகட்சி கூட்டத்தின் பின்
ஜனாதிபதியிடம் நான் சொன்னேன். ‘நீங்கள் தலையிடுங்கள்’
என என்னிடமும், ரிசாத்திடமும், தன்
ஸ்ரீல. சு.க. கட்சி சகபாடிகளை வைத்துக்கொண்டு ஜனாதிபதி சொன்னார்.
----------------------***********--------------------------
ஜனாதிபதியும், அவரது
சகபாடிகளும், சிறுபான்மை கட்சிகளை இதில் தலையிட சொல்கிறார்கள். ‘நீங்கள்
ஆரம்பித்தீர்கள். உங்களுக்குதான் பெரும் பொறுப்பு இருக்கிறது. நாம், இன்றைய
எம் இடத்தில் இருந்தபடி, நமது நாடு என்ற அடிப்படையில் தீர்வுக்கு உதவுகிறோம்’ என்றோம்.
நாட்டில்
ஒரு நெருக்கடி நிலைமை ஏற்பட்டால்,
பாராளுமன்றத்தின் இயல்பு நடவடிக்கைகளை
இடைநிறுத்தி, நெருக்கடி தொடர்பான யோசனைகள் முன்வைத்து, வாக்கெடுப்புக்கு
செல்ல, பாராளுமன்ற சட்ட திட்டங்கள் இடமளிக்கின்றன.
----------------------***********--------------------------
ஆகவே
நாட்டில் நெருக்கடியை உருவாக்கியுள்ள இந்த சிறுபான்மை மஹிந்த கும்பல் விலகி ஓடும்
வரை நாம் ஒவ்வொரு நாளும் நிலையியல் விதிகளை இடைநிறுத்தி வாக்கெடுப்புக்கு
செல்வோம்.
எமக்கு
எதிராக
சபையில்
இந்த கும்பல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டாலும், நாம் ஒருபோதும் ஒரு அங்குலமும்
பின்வாங்கோம்.
ஆகவே வா
மஹிந்த தரப்பு நண்பனே வந்து மோது! உன் ஒவ்வொரு மோதலுக்கும் ஓராயிரம் வாக்குகள்
எங்கள் வசமாகும்! உலகம் உன்னை பார்த்து கைகொட்டி சிரிக்கும்!

0 comments:
Post a Comment