நாடாளுமன்றத்தில் இன்று
பொதுமக்களுக்கான
பார்வைக்கூடம்
திறக்கப்படமாட்டாது என தகவல்
இன்று பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் பொதுமக்களுக்கான நாடாளுமன்ற பார்வைக்கூடம் இன்று திறக்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த
16ஆம் திகதி நாடாளுமன்றம்
கூட்டப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட குழப்பத்தால் அமர்வு இன்றைய தினத்திற்கு ஒத்தி
வைக்கப்பட்டது.
அத்துடன்
நாடாளுமன்றத்தில் பார்வையாளர் தரப்பிலிருந்து வீசப்பட்ட போத்தலையே நான் எறிந்தேன்.
அதற்குள்
மிளகாய்த் தூள் இருந்தது எனக்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


0 comments:
Post a Comment