மீண்டும் பாரிய போராட்டத்திற்கு தயாராகும்
ஐக்கிய தேசிய கட்சி
எதிர்வரும் 8ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்த உள்ளது.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்தப் போராட்டம் கொழும்பில் நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றை அவசரமாக கூட்டி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தகவல் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைப் பற்றி அறிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment