என்னைப் பிரதமராக நியமிக்க
ஜனதிபதி எடுத்து முடிவு தீவிரமான விடயம்.
நான் அவரது பதவியில் இருந்திருந்தால்,
இப்படியானதொரு முடிவை எடுத்திருக்கமாட்டேன்
இனி எங்களை எவராலும் பிரிக்க முடியாது
– மஹிந்த ராஜபக்ஸ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான
தமது கூட்டணியை
எவராலும் பிரிக்க
முடியாது என்று புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள
மஹிந்த ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார்.
பத்தரமுல்லவில்
நேற்று நடந்த
ஜன மகிமய
பேரணியில் உரையாற்றும்போது அவர். உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
“எம்மை
எந்தக் காரணியும்
பிரிக்க அனுமதிக்கக்
கூடாது என்ற
ஒரு இணக்கப்பாட்டுக்கு
வந்திருக்கிறோம். இப்போது எங்களை ஒருவருக்கு எதிராக
மற்றவரை யாராலும்,
திருப்ப முடியாது.
நாட்டில்
ஜனநாயகத்தை ஏற்படுத்தவும், வடக்கு கிழக்கு உள்ளிட்ட
நாட்டை அபிவிருத்தி
செய்யவும், ஜனாதிபதியுடன் இணைந்து
பணியாற்றுவது எனது கடமை.
இன
மற்றும் ஏனைய
வேறுபாடுகளை மறந்து, சிறுபான்மைக் கட்சிகளும் மக்களும்
எமது அரசாங்கத்துடன்
இணைந்து பணியாற்ற
முன்வர வேண்டும்.
என்னைப்
பிரதமராக நியமிக்க
ஜனதிபதி எடுத்து முடிவு தீவிரமான
விடயம். நான்
அவரது பதவியில்
இருந்திருந்தால், இப்படியானதொரு முடிவை எடுத்திருக்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment