ஜனாதிபதியின் அரசியல் சந்தர்ப்பவாதம்
– மங்கள சமரவீர
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா ஜனாதிபதியும், பிரதமரும் தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளதற்கு பதிலளிக்கும் வகையில், தமது டிவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015இல் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்தார். இப்போது விடுவிக்கப்படவுள்ளனர்.
இது அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் பாசாங்குத் தனத்தின் மற்றுமொரு கவர்ச்சிகரமான பகுதி.
இது நடந்தால், இந்த நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கான சாதகமான ஒரே நடவடிக்கை இதுவாகத் தான் இருக்கும்.” என்று அதில் கூறியுள்ளார்.
#Tamil Political Prisoners whom @MaithripalaS stubbornly refused to release since 2015 are now to be released.Yet another stunning piece of political opportunism & hypocrisy. If it happens,this is the only positive action to come out of this crisis #CoupLK #ConstitutionalCrisisLK
0 comments:
Post a Comment