எமது வாக்குகளை
கண்ணியமாகப் பயன்படுத்துவோம்
- ரவூப் ஹக்கீம்
எமது வாக்குகளை கண்ணியமான முறையில் பயன்படுத்துவோம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் இரவும் நேற்று அதிகாலையும் மக்காவுக்குப் பயணமானது குறித்து, ஆங்கில நாளிதழ், செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதனை மறுத்து, ரவூப் ஹக்கீம், தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், குறித்த ஆங்கில ஆங்கில நாளிதழின் பெயரைக் குறிப்பிட்டு, “ ……..எம்மைப்பற்றி விசமத்தனமான செய்தியை வெளியிட்டுள்ளது.
பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மிகச் சிறந்த மரபுகளுக்கு அமைய, நாடாளுமன்ற சுதந்திரத்தை வலியுறுத்தி, எமது வாக்குகளை கண்ணியமான முறையில் பயன்படுத்துவோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீனை இன்று சந்தித்தேன்” என்றும் கூறியுள்ளார்.
The Daily Mirror Report speculating on us is mischievous. We will in the best traditions of representative democracy assert the independence of the legislature and use our votes in a dignified manner. Meeting ACMC Leader @rbathiudeen today.



0 comments:
Post a Comment