விமல் வீரவங்ஷவுக்கு வீடமைப்பு அமைச்சு
வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், விமல் வீரவங்ஷ , வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்னவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், 10 ஆவது சுற்று அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment