ஆட வைக்கும் அடைமழையும் தீஞ்சுபோன அரசியலும்
அரசியலில்
தொடர்ச்சியாக நடந்து வரும் குழப்ப நிலையும்
கிழக்கில் பெய்து
வரும் அடை
மழையும் இன்னும்
ஓய்ந்ததாக தென்படவில்லை.
கிழக்கு
மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு
மாறாக மிகவும்
மோசமான நிலையில்
பாதிக்கப் பட்டுள்ளதனை
அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அன்றாடம்
கூலி வேலை
செய்தும் விவசாயத்தை
நம்பியும் ஜீவனோபாயம்
கடத்தி
வரும் எம் கிழக்கு வாழ் மக்களுக்கு
பெரும் இன்னலை
இந்த அடைமழை
கொடுத்துள்ளமை மக்களின் இயல்பு நிலை வாழ்க்கைக்கு
பெரும் பேரிடியாக
அமைந்துள்ளது.
அன்றாடம்
உழைத்து ஊதியம்
தேடி விடியும்
முன் செலவழித்து
மீண்டும் மறுநாள்
தொழிலுக்கு போனால் தான் சோறு என்று
இருக்கும் இந்த
கால கட்டத்தில்
ஒரு வாய்
சோறு உண்ணக்கூட
வழியில்லாத நிலைக்கு இந்த அடைமழை உள்ளாக்கி
உள்ளமை எல்லோரையும்
மன வேதனைக்கு
உள்ளாகியுள்ளது.
அரசியல்
குழப்ப நிலைகள்
தொடர்ந்தும் விரிந்து செல்லும் இந்த நேரம்
பார்த்து, உணர்வற்று
கிடக்கும் அரசாங்கத்தின்
நிலை பார்த்து
மக்களை சோதனையில்
ஆழ்த்தியுள்ளது இந்தக் கடும் மழை.
திருகோணாமலை,
மட்டக்களப்பு,அம்பாறை பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ள
நிலையில் தம்பலகாமப்
பிரதேசமும் மக்கள் தொடர்ச்சியான அடைமழை காரணமாக
அல்லல் படுகிறார்கள்
என்பதை என்னால்
தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. தொடர்ச்சியான மழை
எத்தனை பாதிப்புகளை
தந்துள்ளது என்பதை நேரில் காணும் போதுதான்
உண்மையை உள்ளம்
ஏற்கிறது.
இச்சந்தர்ப்பத்தில்தான்...
நடப்பு
அரசியல் ஆடுகளங்களை
சற்று ஒதுக்கி
விட்டு தம்
வாக்குகளை தங்கமென
நினைத்து தந்த
அல்லல்படும் எம்மக்களின் துயர் நீக்க
அரசியல் பிரதிநிதிகள்
யாவரும் உதவிக்கரம்
நீட்ட முன்வர
வேண்டும்.
இந்தவேளையில்
தமிழ்,சிங்கள,
முஸ்லீம் மக்கள்
இணைந்து வாழும்
எமது தம்பலகாமப்
பிரதேசமும் என்னால் சுட்டிக்காட்டப்பட வேண்டிய பிரதேசமே.
எம்.வை.இமாம்தீன்
உறுப்பினர்
தம்பலகாம
பிரதேச சபை.

0 comments:
Post a Comment