புதிய அமைச்சர்கள் சிலர் இன்று பதவிப்பிரமாணம்
நல்லாட்சி
அரசாங்கத்தின் அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள்,
இராஜாங்க அமைச்சர்கள்
மற்றும் பிரதி
அமைச்சர்கள் கடந்த சில தினங்களாக நியமிக்கப்பட்டு
வருகின்றனர்.
அந்த
வகையில் இன்றைய
தினமும் அமைச்சர்கள்
மற்றும் இராஜாங்க
அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி
போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக C.B. ரட்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி
இராஜாங்க அமைச்சராக
அனுர பிரியதர்சன
யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது
நிர்வாகம், உள்விவகாரங்கள் மற்றும் நீதி அமைச்சராக
சுசில் பிரேமஜெயந்த
நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச
வர்த்தக மற்றும்
முதலீட்டு ஊக்குவிப்பு
அமைச்சராக பந்துல
குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக
ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்
சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச
வர்த்தகம் மற்றும்
முதலீட்டு ஊக்குவிப்பு
இராஜாங்க அமைச்சராக
லக்ஷ்மன் வசந்த
பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதேச
மருத்துவ இராஜாங்க
அமைச்சராக சலிந்த
திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை
நேற்றைய தினம்
சுகாதார அமைச்சராக
சமல் ராஜபக்சவும்,
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக
எஸ்.பி.திசநாயக்கவும், பெற்றோலிய
வளங்கள் அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சராக
பவித்ரா வன்னியாராச்சியும்
நியமிக்கப்ப்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Hon. Susil Premajayantha:
Minister of Public Administration, Home Affairs and Justice
Hon. Bandula Gunawardena:
Minister of International Trade and Investment Promotion
Hon. S.M. Chandrasena: State
Minister of Social Empowerment
Hon. Lakshman Wasantha Perera:
State Minister of International Trade and Investment Promotion
Hon. Salinda Dissanayake: State
Minister of Indigenous Medicine
Hon. C B Rathnayake: State
Minister of Transport
Hon. Anura Priyadarshana Yapa:
State Minister of Finance








0 comments:
Post a Comment