தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது
இன்று திடீரென ஜனாதிபதியை சந்தித்த பின்னர்
ஊடக அறிக்கையில் கூட்டமைப்பு தெரிவிப்பு

தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும், அந்த தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு விளக்கி கூறியுள்ளார்கள்
ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கலந்தாலோசித்து தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், .சித்தார்த்தன், எம்ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலிருந்து மேற்படி விடயம் தெரியவருகிறது. அதில் மேலும்,

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி, சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்து கூறினார்கள்.

இந்த தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும், உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும், அந்த தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு விளக்கி கூறினார்கள்.

        

இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு தொடர்பான ஊடக அறிக்கை



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top