நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதா?- இல்லையா?
இன்று காலை முடிவு செய்கிறார் மஹிந்த
நாடாளுமன்றம்
இன்று பிற்பகல்
மீண்டும் கூடவுள்ள
நிலையில், ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணியின், நாடாளுமன்றக் குழு இன்று காலை 11 மணியளவில்
கூடவுள்ளது.
நாடாளுமன்ற
உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை நேற்றிரவு
தெரிவித்துள்ளார்.
அடுத்த
கட்ட நடவடிக்கைகள்
தொடர்பாக தீர்மானிக்கவே
இன்று காலை
கூடவுள்ளதாக அவர் கூறினார்.
இந்தக்
கூட்டத்திலேயே இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதா-
இல்லையா என்று
முடிவு செய்யப்படும்
என்றும் அவர்
கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment