அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
ரணிலை அலட்சியம் செய்த மைத்திரி
ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு
கலந்து கொண்ட ஒரு கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன நேற்று
ஜனாதிபதி செயலகத்தில் நடத்திய அனைத்துக்
கட்சிக் கூட்டத்தில்,
தான் பதவி
நீக்கிய பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவை
அலட்சியம் செய்யும்
வகையில் நடந்து
கொண்டார் என்று
செய்திகள் தெரிவிக்கின்றன.
அனைத்துக்
கட்சிக் கூட்டத்தில்,
பிரதமர் மைத்திரிபால
சிறிசேன, ஐதேக
பிரதித் தலைவர்
சஜித் பிரேமதாச
மற்றும்
கட்சியின் மூத்த தலைவர்களுடன் இயல்பான முறையில்
பேசினார்.
அவர்களுடன்
கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். எனினும், ரணில்
விக்கிரமசிங்கவுடன், அவர் பேசவில்லை.
ரணில்
விக்கிரமசிங்க முன்வைத்த கருத்துக்களுக்கும்
பதிலளிக்காமல் தவிர்த்துக் கொண்டார் என்றும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
முன்னதாக,
நேற்றைய அனைத்துக்
கட்சி கூட்டத்தில்
சஜித் பிரேமதாசவே
ஐதேக தரப்பில்
கலந்து கொள்வதாக
இருந்தது.
எனினும்
கடைசி நேரத்திலேயே
ரணில் விக்கிரமசிங்க
பங்கேற்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில்,
சஜித் பிரேமதாசவும்
கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிப்
பிரதிநிதிகளின் பெரும்பாலனவர்களின் முகங்களில் சிரிப்பைக் காண முடியவில்லை என்றும் இது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கலந்து கொண்ட
ஒரு கூட்டமாகத் தென்பட்டதாகவும் அரசியல் அவதானிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment