‘பிரதமர் மஹிந்த..’ என்று கூறியதும்
அதிர்ந்து போன நாடாளுமன்ற சபை
பலத்த
எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய
தினம் கூடிய
நாடாளுமன்ற அமர்வானது சற்றும் எதிர்பாராமல் 23ஆம்
திகதி வரை
ஒத்திவைக்கப்பட்டது.
எனினும்
இன்றைய அமர்வின்
ஆரம்பத்திலேயே நாடாளுமன்றம் ஒத்திவைப்பு தொடர்பான அறிவித்தலை
பிரதி சபாநாயகர்
வெளியிட்ட போது
கட்சி உறுப்பினர்கள்
குரல் எழுப்பி
பெரும் ஆரவாரத்தில்
ஈடுபட்டனர்.
இதையடுத்து
சிலருக்கு உரையாற்றுவதற்கு
பிரதி சபாநாயகர்
அனுமதி வழங்கியிருந்தார்.
இதன்போது
தினேஸ் குணவர்தன
உரையாற்றுதையில்,
“பிரதமர்
மஹிந்த ராஜபக்ஸ
மற்றும்...” என ஆரம்பிக்கும் போது மஹிந்த,
தினேஸ் குணவர்தனவிற்கு
அருகில் வந்து
அமர்ந்தார்.
இதன்போது
ஏனைய உறுப்பினர்கள்
பெரும் ஆரவாரம்
செய்ததுடன், கூச்சலிட்டு கத்தினார்கள். தினேஸ் குணவர்தனவை
பேச விடாமல்
கத்தியுள்ளார்கள்.
இதில்
மஹிந்தவும், கூச்சலிடுபவர்களை பார்த்து சிரித்ததுடன், பதில்
தெரிவித்ததையும் காணக்கூடியதாக உள்ளது

0 comments:
Post a Comment