சாய்ந்தமருது
பொலிவேரியன்
குடியேற்ற
கிராமத்தில் 15 சடலங்கள்
- கல்முனை, சவளைக்கடை ,சம்மாந்துறை
பொலிஸ் பிரிவுக்குள் தொடர்ந்தும் ஊரடங்கு
பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிப்பு
சாய்ந்தமருது
கல்முனை சவளைக்கடை
சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து
ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக
பொலிஸ் ஊடக
பேச்சாளர் ருவான்
குணசேகர இன்று
தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது
பொலிவேரியன் குடியேற்ற கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து
பல சடலங்கள்
கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக
பேச்சாளர் ருவான்
குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று
காலை இதுதொடர்பாக
அவர் தெரிவிக்கையில்
தற்கொலை குண்டுதாரிகள்
வெடிக்க செய்த
சம்பவத்திலிருந்து இந்த சடலங்கள்
கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய
தினம் கல்முனை
பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட
போக்குவரத்து வாகன கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்
கான்ஸ்டபல் ஒருவருக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது.
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் சில சந்தேக
நபர் இருப்பதாக
செய்தி கிடைத்துள்ளது.
இந்த கான்ஸ்டபல்
இந்த தகவலை
தமது சிரேஷ்ட
பொலிஸ் அதிகாரிகளிடம்
தெரிவித்துள்ளார். என்றும் ஊடக
பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைவாக
உடனடியாக செயல்பட்ட
பொலிஸ் அதிகாரிகள்
மற்றும் பொலிஸ்
விஷேட அதிரடி
படை அதிகாரிகள்
குறிப்பிட்ட வீட்டை பரிசோதிப்பதற்காக வீட்டை நெருங்கும்
வேலையில் அந்த
வீட்டிலிருந்து பொலிஸார் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தோடு அந்த
வீட்டில் வெடிப்பு
சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்த தற்கொலை குண்டுதாரிகள் இந்த வெடிப்பு
சம்பவத்தை மேற்கொண்டுள்ளன
என்றும் பொலிஸ்
ஊடக பேச்சாளர்
குறிப்பிட்டுள்ளார்.
இதனை
தொடர்ந்து பொலிஸ்
ஊடக அதிரடிப்படை
மற்றும் இராணுவத்தினர்
இந்த பகுதியில்
சோதனை நடவடிக்கைகளை
ஆரம்பித்தனர். வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டையும்
பரிசோதனைக்கு உட்படுத்தினர். வீட்டில் இருந்த தற்கொலை
குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் 3 ஆண்களின் சடலங்களுடன்
மேலும் 3 பெண்களின்
சடலங்களும் 6 பிள்ளைகளின் சடலங்களும் வீட்டிலும் வெளியிலும்
இருந்த தற்கொலை
குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் மேலும் மூவரினதும்
சடலங்கள் அடங்கலாக
15 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பாதுகாப்பு
பிரிவினர் அந்த
வீட்டுக்கு சென்ற வேளையில் காயங்களுக்குள்ளாகியிருந்த பெண் ஒருவரையும்
சிறு குழந்தை
ஒன்றையும் வைத்தியசாலைக்கு
அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். தேடுதல் நடவடிக்கைகள்
தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் அவர் கூறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment