லங்கையில் இரண்டு இஸ்லாமிய 
அமைப்புகளுக்கு தடை
சொத்துக்களையும் முடக்குமாறு
 ஜனாதிபதி அதிரடி உத்தரவு



நாட்டில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றும் தீவிரவாதத்தை தூண்டுகின்ற அமைப்புகளாக கருதப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும் ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம் செய்லானி ஆகிய அமைப்புகளை தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால், தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கம் – National Thowheed Jamath (NTJ) மற்றும் ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம் செய்லானி இயக்கம் – Jamath e Millathu Ibraheem Zeilani (JMI) ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அதற்கமைய அவ்வியக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


நாட்டில் செயற்பட்டுவரும் ஏனைய இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளும் அவசர கால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

           
President Maithripala Sirisena, in terms of powers vested in him as the under Emergency Regulations No. 01 of 2019, has taken steps to ban the organizations National Thawheed Jammath (NTJ) and Jamathei Millathu Ibraheem (JMI) in Sri Lanka.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top