சரத் பொன்சேகாவுக்கு
சட்டம் ஒழுங்கு
அமைச்சர் பதவி
கோருவதற்கு
ஐதேக நாடாளுமன்றக் குழு முடிவு
– இன்றைய அமைச்சரவை கூட்டம் சூடுபிடிக்கும்
முன்னாள்
இராணுவத் தளபதி
பீல்ட் மார்ஷல்
சரத் பொன்சேகாவை,
சட்டம் ஒழுங்கு
அமைச்சராக நியமிக்குமாறு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவிடம் கோருவதற்கு ஐதேக நாடாளுமன்றக் குழு
நேற்று முடிவு
செய்துள்ளது.
ஐதேக
நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இந்த யோசனையை
கவிந்த ஜெயவர்த்தன
முன்வைத்திருந்தார். அதனை ஹெக்டர்
அப்புகாமி வழிமொழிந்தார்.
அமைச்சரவை
அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதால், சரத் பொன்சேகாவுக்கு
அமைச்சரவையில் இடமளிக்கும் வகையில், அமைச்சர் பதவியில்
இருந்து விலக
அர்ஜூன ரணதுங்க
முன்வந்துள்ளார்.
தற்போது
சட்டம் ஒழுங்கு
அமைச்சுப் பதவி
ஜனாதிபதியிடம் உள்ளது. அவர், ஏற்கனவே சரத்
பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுத்து வருகிறார்.
இந்த
நிலையில், சரத்
பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியை
வழங்குமாறு இன்று நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில்
ஜனாதிபதியிடம், ஐதேக கோரிக்கை விடுக்கவுள்ளது என்று
அமைச்சர் லக்ஸ்மன்
கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.