பயங்கரவாத நடவடிக்கையில் உயிரிழந்தவர்களின்
உடல்களை பள்ளிவாசல் பொறுப்பேற்காது
சாய்ந்தமருது
உலமா சபைஅறிவிப்பு
சாய்ந்தமருது
வொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்தில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின்
உடல்களை தமது
பள்ளிவாசல் பொறுப்பேற்காது எனவும் அந்த சடலங்களை
தமது பிரதேச
மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை
எனவும் சாய்ந்தமருது
ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை
அறிவித்துள்ளது.
மேலும்,
சாய்ந்தமருது வர்த்தக சபை மற்றும் பொதுமக்களுடன்
இணைந்து இந்த
அறிவித்தலை விடுப்பதாகவும் உலமா சபை மேலும் தெரிவித்துள்ளது.
சாய்ந்தமருது
ஜும்ஆ பள்ளிவாசல்
உலமா சபையினரின்
ஏற்பாட்டில் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போதே
அவர்கள் இவ்வாறு
தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள்
குறிப்பிடுகையில்,
பயங்கரவாத
நடவடிக்கையில் ஈடுபட்டு இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு அமைதியின்மையை ஏற்படுத்திய நபர்களின் உடல்களை
எமது சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் பொறுப்பேற்காது.
மேலும்,
அந்த சடலங்களை
இப்பகுதி மையவாடிகளில்
அடக்கம் செய்யவும்
இடமளிக்கமாட்டோம்.
ஸியாரம்
(புனிதர்களை அடக்கம் செய்த இடம்) அமைந்துள்ள
பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விஷமிகளின் தாக்குதல்
நடைபெறலாம் என பொலிஸார் எம்மை எச்சரித்ததற்கு
அமைய, நாம்
ஸியாரம் பகுதியில்
அமைந்துள்ள எமது பள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல
நடவடிக்கைகளை முடக்கியிருந்தோம்.
ஏற்கனவே
சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், சொத்துக்களையும்
இழந்து மீள்
குடியேறியுள்ள வொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிராம
மக்களை, மீண்டும்
துயரத்தில் ஆழ்த்தியிருப்பது மோசமான ஒன்று என
அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊடக சந்திப்பில் சாய்ந்தமருது –
மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவர் வை.எம்.ஹனிபாவும் கலந்து கொண்டிருந்தார்.
அப்பகுதி
மக்கள் கருத்து
தெரிவிக்கையில்,
தமது
வாழ்நாளில் இவ்வாறான சம்பவத்தை முதன் முதலாகக்
கண்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்,
கடந்த சில
வாரங்களுக்கு முன்னர் தனது அடையாள அட்டையை
எடுத்துச் செல்லாமலேயே
சாய்ந்தமருதிலிருந்து கட்டுநாயக்க விமான
நிலையம் வரை
பயணித்துத் திரும்பியதாகக் கூறும் இப்பகுதியைச் சேர்ந்த
ஒருவர் இப்போது
அடையாள அட்டையின்றி
வெளியேற முடியாத
பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான
குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னர் தமது சுதந்திரம்
பறிபோய் விட்டது
என அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,
தமது சாய்ந்தமருதில் இவ்வாறானதொரு சம்பவம்
நடந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையான கவலையுடனும்
கோபத்துடனும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment