மட்டக்களப்பு  தேவாலயத்தில்
தாக்குதல் நடத்துவதற்கு முன் மசூதிக்கு சென்ற
தீவிரவாதியின் பகீர் காணொளி வெளியானது

இலங்கை மட்டக்களப்பு  தேவாலயம் ஒன்றில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு தீவிரவாதியின் கடைசி நிமிட பிரத்யேக வீடியோவை பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ளது.

கடந்த 21-ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் நடந்த அடுத்தடுத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலினால் தற்போது வரை 250-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் ஏராளமானோர் தங்கள் உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு .எஸ் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய திவீரவாதி Mohammed Nasar Mohammed Azar(34)-ன் கடைசி நிமிட சிசிடிவி வீடியோ காட்சியை பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.

அதில் அசார் தாக்குதல் நடத்திய நாளான ஞாயிற்றுக் கிழமை காலை 02.10 மணிக்கு மட்டகளப்பில் இருக்கும் Jami Us-Salam மசூதிக்கு இரண்டு பைகளுடன் வருகிறான். அதன் பின் அங்கு சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்கும் அவர் கையில் தான் வைத்திருக்கும் மொபைல் போனை ஏதோ செய்து கொண்டிருக்கிறான்.

அப்போது அங்கு 4.42 மணியளவில் ஏதோ பொலிஸாரின் வாகனம் வருகிறது. அங்கு பொலிஸார் பார்க்கும் போது அவன் இல்லை. இதைத் தொடர்ந்து மசூதி திறந்தவுடன் 5.42 மணிக்கு அசார் உள்ளே செல்கிறான்.

அதன் பின் உள்ளே சென்று அங்கிருக்கும் ஒருவரிடம் பேசிவிட்டு, உள்ளே இருப்பவர்களுடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென்று எழுந்து செல்கிறான். இதைத் தொடர்ந்து 9.33 மணிக்கு பேக்குடன் வெளியில் சென்று தாக்குதலை நடத்தியுள்ளான்.







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top