பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சந்தேக நபரான
சஹ்ரான்
காசிம் இறந்து விட்டார்;
பாதுகாப்புப் பிரிவு தெரிவிப்பு
பயங்கரவாத
தாக்குதல்களின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் காசிம் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக
பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு
தரப்பினர் நடத்திய விசேட ஆய்வு,புகைப்படங்கள் மற்றும் சீ.சீ டிவி காட்சிகள் ஊடாக நடத்தப்பட்ட
விசாரணைகளில் சஹ்ரான் காசிம் இறந்தது உறுதியாகியுள்ளது.
கொல்லப்பட்ட
நபரின் தலைப்பகுதி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் இது உறுதியாகியுள்ளது. எவ்வாறாயினும்
இது குறித்து மேலும் உறுதிப்படுத்தி மரபணு பரிசோதனை நடத்த பாதுகாப்புத் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏப்ரல்
21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் ஷாங்ரி லா ஹோட்டலில் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இந்த
நபர் கொல்லப்பட்டுள்ளார்.
தேசிய
தௌஹீத் ஜமாஅத்
எனும் அமைப்பை
உருவாக்கி, அதற்குத் தலைமை வகித்து வந்த
அவர், கடந்த
2017ஆம் ஆண்டிலிருந்து
தலைமறைவாகி இருந்த நிலையிலேயே, மேற்படி தாக்குதலில்
ஈடுபட்டு இறந்துள்ளதாக
ராணுவ புலனாய்வுப்
பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
சஹ்ரான் காசிம்
காத்தான்குடியைச் சேர்ந்தவரும்ஒரு மௌலவியுமாவார்.
0 comments:
Post a Comment