சாய்ந்தமருது,
சம்மாந்துறைப் பகுதியில்
மூன்று குண்டுகள்
வெடிப்பு
பெரும் பதற்றத்தில்
மக்கள்
சாய்ந்தமருது
பொலிவேரியன் குடியேற்றக் கிராமத்தில் பொலிஸாருக்கும்
குழு ஒன்றுக்கும்
இடையில் துப்பாக்கி
பிரயோக மோதல்
இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
குறித்த
பகுதியில் விசேட
அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட
சோதனை நடவடிக்கையின்
அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும்
குழு ஒன்றுக்கும்
இடையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் துப்பாக்கி
பிரயோக மோதல்
காரணமாக துப்பாக்கிக் குண்டுகள் சாய்ந்தமருதை நோக்கி பரவலாக வந்ததாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
பாதிப்பு
குறித்து இதுவரை
தகவல்கள் வெளியாகவில்லை.
கடும் மோதல்
சம்பவத்தினை அடுத்து அந்தப் பகுதியில் பெரும்
பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, சம்மாந்துறை சம்புமடுப் பகுதியில் தற்கொலை
குண்டுகள் தயாரிக்கும்
நிலையம் ஒன்று
உள்ளதாக ஏற்பட்ட
சந்தேகத்திற்கமைய பொலிஸார் குறித்த பகுதிக்கு இன்று
மாலை சென்றுள்ளனர்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு
சென்று சோதனையிட்ட
போது, குழுவொன்று
பொலிஸார் மற்றும்
விசேட அதிரடிப்படையினரை
நோக்கி துப்பாக்கி
பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக
தெரியவந்துள்ளது.
இதேவேளை, சாய்ந்தமருது, சம்மாந்துறைப்
பகுதியில் மூன்று குண்டுகள் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கும் மர்ம கும்பலுக்கும் இடையில்
இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிற்கு இடையில் இந்த குண்டுகள் வெடித்துள்ளதாக
தெரியவருகின்றது.
இந்த மோதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment