சம்மாந்துறை,சாய்ந்தமருது பிரதேசங்களில்

 சுமூகமான நிலை

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்


சம்மாந்துறை, சாய்ந்தமருது பிரதேசங்களில் சுமூகமான நிலை ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடமொன்றை சோதனையிடும்போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் பொலிசாருக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு ஆயுதாரிகளும் சிவில்வாசி ஒருவரும் உயிரிழந்துள்ளார்கள்.

 காயமடைந்த மூன்று பேர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலாகிறது.

 இதேவேளை, சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று அதிகளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. வெடிப்பு பொருட்கள், டெட்டனேற்றர்கள், பறக்கும் ரோன் இயந்திரமும் இதில் அடங்கும் என இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின்போது தற்கொலை குண்டுதாரிகள் என்று கருதப்படும் குழுவினர் அணிந்திருந்த வீடியோ காட்சியில் காணப்பட்ட உடைகளுக்கு சமனான உடைகளும் இதில் இருந்தமை தெரியவந்திருக்கின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top