28 29 30 ஆம் திகதிகளில் காலநிலையில் மாற்றம்
அவதானத்துடன் செயற்பட வலியுறுத்தல்



 தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ளது.

இது தொடர்பில் இடர் முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தெளிவுப்படுத்தும் செய்தியாளர் மகாநாடு இன்று இந்த அமைச்சில் நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்ட அரச நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார விளக்கம் அளித்தார். இலங்கைக்கு 1000 கிலோ மீற்றர் அப்பாலான பிரதேசத்தில் உயர்நிலை உருவாகி வருவதாகவும் இந்த நிலைமையுடன் இம்மாதம் 28 29 ஆம் திகதிகள் மற்றும் மே மாதம் 1ஆம் திகதி வரையில் இந்த சீரற்ற வானிலை நிலவுவதுடன் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மலைவீழ்ச்சி பதிவாகப்படும்.

கடும் காற்றும் வீசக்கூடும் இதனால் கடற்தொழிலாளர்களுக்கு பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதனால் இந்த காலப்பகுதியில் கடலுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு அவர் தெரிவித்துக்கொண்டார். அவசரநிலை ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்த செய்தியாளர் மகாநாட்டில் கலந்துக்கொண்ட வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க கருத்து தெரிவிக்கையில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படக்கூடிய நிலை உண்டு பொதுவாக மாலை வேளையில் ஏற்படும் மழையுடன் காலநிலை இன்றும் நாளையும் நிலவுவதுடன் 27 28 30ஆம் திகதிகளில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக பணிப்பாளர் கூறினார்.

இதற்கு முக்கிய காரணம் நாட்டில் 1200 கிலோமீற்றருக்கு அப்பால் கிழக்கு திசையில் பொத்துவில் பிரதேசத்துக்கு அருகாமையில் குறைந்த தாழமுக்க நிலை உருவாகுவதே ஆகும். இது எதிர்வரும் சில தினங்களில் குறைந்த தாழமுக்க நிலையாக மாற்றமடையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top