இலங்கையை அச்சுறுத்திய பிரதான தற்கொலை
குண்டுதாரியின் மனைவி மற்றும் மகள் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட பிரதான தீவிரவாதியின் மனைவி மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் சாய்ந்தமருதில் வைத்து கைது செய்யப்ட்டுள்ளனர்.

சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினால் படுகாயமடைந்த சிறுமி மொஹமட் சஹ்ரானின் மகள் எனவும் பெண் அவரது மனைவி எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த 26ம் திகதி சிறப்பு அதிரடி படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் சாய்ந்தமருது  பிரதேசத்தில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

26 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு பாதுகாப்பான வீட்டில் இருந்து துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை பாதுகாப்பு படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி பாதுகாப்பான வீடுகளை சோதனையிடும் போது அந்த வீட்டில் இருந்து ஆண், பெண்கள் உட்பட சிறுவர்களின் 15 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அந்த வீடடில் இருந்து காயங்களுக்குள்ளாக்கப்பட்ட 4 வயதுடைய சிறுமி மற்றும் பெண்ணொருவர் இராணுவத்தினரால் கல்முனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்பினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயதுடைய சிறுமியான மொஹமட் சஹ்ரான் றுசைனா என்பர் சஹ்ரானின் மகள் எனவும், காயமடைந்த பெண்ணான அப்துல் காதர் பாத்திமா சாதியா என்பர் அவரின் மனைவி எனவும் விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்

மொஹமட் சஹ்ரான் தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரும் கொழும்பு, சங்கரில்லா ஹொட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top