நாடாளவிய ரீதியில் 2434 முஸ்லிம்
பள்ளிவாசல்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளதாக
சிங்கள ஊடகம் தகவல்
பதிவு செய்யப்படாத முஸ்லிம் பள்ளிவாசல்கள்
நாடாளவிய ரீதியில் உள்ளதாக செய்தி சேவை மேற்கொண்ட தேடுதலில்
தெரியவந்துள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் பள்ளி வாசல்கள் நிர்மாணிக்கப்பட்டதன்
பின்னர் அதனை முஸ்லிம் மதம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்ய
வேண்டும்.
அதற்காக வக்ஃப் சட்டத்தின் கீழ் நிதி
ஒதுக்கப்படுவதுடன், பள்ளிவாசல் குறித்த உறுப்புரை, பள்ளிவாசலுக்கு சொந்தமான
சொத்துக்களுடன், நிலத்தின் திட்ட நகலும் இதன்போது முன்வைக்கப்பட வேண்டும்.
தற்போது 2 ஆயிரத்து 434 முஸ்லிம் பள்ளிவாசல்கள்
பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பதிவு செய்யப்படாத முஸ்லிம் பள்ளிவாசல்களும்
உள்ளமை செய்தி பிரிவு மேற்கொண்ட தேடுதலில் தெரியவந்துள்ளதாக அந்த ஊடகம்
தெரிவித்துள்ளது.
இதன் கீழ் தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான
பள்ளிவாசல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த அமைப்பிற்கு சொந்தமான 60 பள்ளிவாசல்கள்
அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் மத திணைக்களத்தின் பணிப்பாளர்
எம்.ஆர்.எம்.மலிக் அந்த சிங்கள ஊடகத்தின் செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய
போது தெரிவித்துள்ளார் என தெரிவித்துள்ளது..
0 comments:
Post a Comment