வவுணத்தீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதான
முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்
அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு
வவுணத்தீவு
இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள
முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்வதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்த விடயத்திற்கான உத்தரவை
வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தனது முகப்புத்தகப் பக்கத்தில் இட்டுள்ள
பதிவில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்
மனோகணேசன் தனது முகப்புத்தகப் பக்க பதிவில் மேலும்,
கடந்த
நவம்பர் மாதம்
மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால்
கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில்
கைதான முன்னாள்
போராளி அஜந்தனை
விடுவிக்க, ஜனாதிபதி அமைச்சர் மனோ கணேசனிடம்
உறுதியளித்துள்ளார்.
தற்போது
கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின்
அடிப்படையில், பொலிசாரை கொலை செய்தது தேசிய
தெளஹீத் ஜமா
அத்தின் மொஹமட்
சஹ்ரான் குழுவினர்
என தெரிய
வந்துள்ளது.
இந்நிலையில்
இவ்விடயத்தில் அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான
முன்னாள் போராளி
கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு
அமைச்சர் மனோ
கணேசன், ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து,
அவரை உடன்
விடுவிக்க நடவடிக்கை
எடுக்கும்படி பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்டமா
அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ
கணேசனிடம், ஜனாதிபதி சற்று முன் (8AM May 1st) உறுதியளித்துள்ளார்.
இது
தொடர்பில் அஜந்தனின்
மனைவியான செல்வராணி
ராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம்
அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.