கிழக்கு ஆளுநரை பதவியிலிருந்து இடைநிறுத்த
ஜனாதிபதிக்கு கடிதம்!


கிழக்கு மாகாண ஆளுநரை பதவியிலிருந்து இடைநிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு இன்று அவர் எழுதிய கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களையும், ஆதரவளித்தவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி நீதி மன்றத்தினால் உச்சபட்ச தண்டணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முதல் இச்சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை, இந்திய அரசினால் உளவுத்தகவல் பரிமாறப்பட்டமை, அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தும் பாதுகாப்புச் சபைக்கு தெரிவிக்கப்படாமை போன்ற விடயங்களில் அரசின் கவனக்குறைவே.

இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இவைமட்டுமின்றி கிழக்கு மாகாண ஆளுநர் தற்கொலையாளிக்கு பாராட்டு வழங்குவதும் இணையத்தளங்களில் செய்திகளாக வெளியாகி உள்ளன. விசாரணை ஊடாக தண்டணை வழங்க வேண்டும்.

பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர் கடமைகளை நிறுத்தப் போவதாக அறிவித்த ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பாகவும், கிழக்கு மாகாண தமிழ்மக்கள் இணையத்தளங்களில் ஆளுநரும் தற்கொலையாளியும் உள்ள படத்தைப் பார்த்து கொதிப்படைந்த நிலையில்,

இச்சம்பவங்களுடன் ஆளுநர் சம்மந்தப்பட்டுள்ளாரா? என சந்தேகிக்கும் நிலையில் நீதியான விசாரணை நடாத்தி குற்றவாளி இல்லையென நிருபிக்கும் வரையில் தற்காலிகமாக ஆளுநரை பதவியிலிருந்து இடைநிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top