கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை
பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த
பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

5 மணிமுதல் மீண்டும் அமுல்



கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் மீளறிவித்தல் வரும் வரையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

சம்மாந்துறை கல்முனை மற்றும் சவளக்கடை ஆகிய பகுதிகளில் இன்று காலை பத்து மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  

இதேவேளை, மாலை 5 மணியிலிருந்து மீள் அறிவித்தல் வரும் வரை அந்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியில் நேற்று முன் தினம் தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கும், பயங்கரவாத குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அதிரடி படையினரின் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாத பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பிரதேசங்களில் மீளறிவித்தல் வரும் வரையிலான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top