ஹிரு டீவியின்சலகுனநிகழ்ச்சி
அமைச்சர் ரிசாத் பதியுதீனின்
துணிச்சலான பதிலும் விவாதமும்.




அமைச்சரே,
இப்படியான ஒரு சூழ்நிலையில் இப்படியான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெட்கப்படுகிறீர்களா?”
என்ற கேள்வியோடு ஆரம்பமாகிறது நேற்றைய ஹிரு டீவியின்சலகுனநிகழ்ச்சி.

நான் ஏன் வெட்கப்பட வேண்டும். ஆனால் என் சமூகம் சார்பாக நான் வேதனைப்படுகிறேன்என்று பதிலளித்து துவங்குகிறார் அமைச்சர் Rishad Bathiudeen.

மேற்கத்தைய தீவிரவாத கொள்கைகளுக்குள் தம் மண்டைகளை தொலைத்த ஒரு மூடர் கும்பல் செய்த நாசகார பணிக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் படர்ந்திருக்கும் கறையை,

ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைமையாக ரிஷாட் பதியுதீன் பெரும்பான்மை ஊடக பரப்பில், மூன்று ஊடகவியலாளர்களின் மூச்சுவிடாத கேள்விகளுக்கும் தன்னந்தனிமையில் நின்று களமாடி தெளிவான பதிலை வழங்கி சமூகம் மீதான கறையையும், தன் மீதான கண்மூடித்தனமான விமர்சனங்களையும் போக்க
பாடுபட்டதை அவரின் அரசியல் ரீதியான சரி பிழைகளுக்கப்பால் கட்டாயம் போற்றத்தான் வேண்டும்.

யாரோ ஒரு கும்பல் செய்த வேலைக்காக இந்த நாட்டில் வாழும் 22இலட்சம் முஸ்லிம்களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தக்கூடாது. எங்கள் சமூகத்திலிருந்தே இப்படியான ஒரு வெடிகார கூட்டம் மேலெழுந்ததை எண்ணி நிலைகுலைந்து, தலைகுனிந்து
நிற்கிறோம் என்ற பொருள்பட அமைச்சர்
பேசினார்.

2016.11.18 அன்று விஜயதாச ராஜபக் பாராளுமன்றில் இஸ்லாமிய ஜமாஆத் பிரிவுகளையும், சில மத்ரஸாக்களையும் முன்வைத்து இஸ்லாமிய அடிப்படை வாதம் குறித்து பேசிய பேச்சை ஒளிபரப்பு செய்து ஏன் நீங்கள் அப்போதெல்லாம் அவற்றை தடுத்திருக்கவில்லை என்று முஸ்லிம்களை சுட்டி அமைச்சரிடம் அந்த கேள்வியை கேட்ட போது,

பௌத்த மதத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நிக்காய பீடங்களை போன்றுதான் எங்கள் சமூகத்திலும் ஒவ்வொரு ஜமாஆத் பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் அடிப்படை வாதங்களை போதிக்கவில்லை.

ஸஹ்ரான் என்ற யாரோ ஒருவர் செய்த நாசகார வேலைக்காக ஜமாஅத் வாரியாக முழு முஸ்லிம்களையும் முடிச்சுப்போட முயலக்கூடாது என்றவாறு பேசினார்.

முழுமையாக நிகழ்ச்சியை பார்க்கின்ற போது, 3 ஊடகவியலாளர்களும் ஏலவே ஒன்றை தீர்மானித்துவிட்டு அதை அமைச்சரின் வாயால் வெளியே எடுப்பதற்கு முயல்வதை போலவே தென்பட்டது.

வில்பத்து குறித்த கேள்விகளுக்குள் நகர்ந்த நிகழ்ச்சி பின்னர் அமைச்சரின் சொந்த கட்டுமான கம்பனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த கேள்விகளுக்கு நகர்ந்த போது அமைச்சர் ஆவேசமாக பதிலளிக்க துவங்கினார்.

சமகால விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக என்னை அழைத்துவிட்டு எனது குடும்பம் சார்பாகவும் எனது தனிப்பட்ட விடயங்களையும் ஏன் அலச விழைகிறீர்கள்?!

ஒரு பொறுப்புள்ள ஊடகமாக அனைத்து சமயங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளை செய்ய வேண்டிய நீங்கள்தானா இங்கு என்னை அழைத்து வைத்துக்கொண்டு நானும் என் சார்பு சமூகமும் அடிப்படை வாதத்திற்கு துணைபோகிறோம் என்று வாதிட வருகிறீர்கள்?!

நடைபெற்று முடிந்த சாய்ந்தமருது சம்பவத்தின் போது சூத்திரதாரிகளை பிடிப்பதற்கு பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கி, ஒத்தாசை புரிந்தவர்கள் அந்தப் பிரதேச பள்ளிவாசல் நிர்வாகமும், முஸ்லிம்களும் தான்,

என்ற செய்தியை கூட உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் முஸ்லிம்கள் அடிப்படை வாதத்தை ஆதரிக்கிறார்கள் என்று இன்று விவாதிக்க வருகிறீர்கள்.

இயலுமென்றால் அப்படி நல்லிணக்கத்தை நேசிக்கும் படியாக நீங்கள் ஒளிபரப்பிய செய்தியொன்றை காட்டுங்கள்.

உங்கள் தொலைக்காட்சி முற்றுமுழுதான இனவாத ஊடகம்.
இனவாதத்தை வளர்க்கும்
ஊடகம்.
யாருக்காகவோ கொந்தராத்து ஊடக பணி செய்கிறீர்கள்.

எனது குப்பைகளை அலசுவதுதான் உங்கள் பணியாயிருக்கிறது. அதைவிடுத்துவிட்டு பொறுப்புள்ள ஊடகமாய் இனி பணி செய்யப்பாருங்கள் என்றார்.’

அமைச்சரை ஒரு தீவிரவாதியாக சுட்டிக்காட்டும் பாணியிலாக மிரட்டலாக, திக்குமுக்காட செய்யும் வகையிலாக தொடுக்கப்பட்ட அத்தனை கேள்விகளையும் தைரியமாக எதிர்கொண்டு அமைச்சர் பதிலளித்தார்.

சிங்கள மொழி தனக்கு சரளமாக தெரியாத போதும்
கூட ஒரு பொறுப்புமிக்க அரசியலாளராக சமூகத்தின் மீது துரதிஷ்டமாக விழுந்தருக்கும் கறையை துடைத்தெறிய அந்த நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்கிறேன் என்றதே அமைச்சரின் அபாரம்!

கூதலுக்கு பயந்து குளிக்காமல் இருக்கும்நம் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் துணிந்து நின்று அத்தனை கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்த அமைச்சரை மெச்சுகிறோம்!!

-சல்மான் லாபீர்



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top