வானுக்குள்
இருந்து தாக்குதல் நடத்தியவாறே
தீவிரவாதிகளில் இருவர் தற்கொலை!
சாய்ந்தமருது
வொலிவேரியன் என்னும் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் தீவிரவாதிகளில் இருவர்
வானுக்குள்
இருந்து தாக்குதல்
நடத்தியவாறே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்திற்கிடமான
வீடு,வாகனம்
மற்றும் ஆள்
நடமாட்டம் தொடர்பில்
பொதுமக்கள் சிலர் விசாரிக்க முற்பட்டவேளை அங்கிருந்த
தீவிரவாத கும்பல்
தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனை
தொடர்ந்து உடனடியாக
விசேட அதிரடிப்படையினர்
மற்றும் பொலிஸாருக்கு
பொதுமக்கள் தகவல் வழங்கியதனை தொடர்ந்து அதிரடிப்படையினர்
சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது
குறித்த வானிலிருந்து
உயிரிழந்த இரண்டு
தீவிரவாதிகளின் சடலமும், ஆயுதங்களும், இரு அடையாள
அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள்
பயன்படுத்திய வான் கடந்த 19ம் திகதி
அக்கரைப்பற்றில் வாங்கப்பட்டுள்ளதுடன், NTJ தலைவன்
ஸஹ்ரானின் சகோதரன்
நியாஸ் என்பவரே
குறித்த வானை
கொள்வனவு செய்துள்ளதாகவும்
தெரியவந்துள்ளது.
குறித்த
பகுதியிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தீவிரவாதிகள்
தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட முடியவில்லை எனவும்
குறித்த வீட்டில்
தற்கொலைதாரிகள் மேலும் உள்ளே இருக்கலாமெனவும் சந்தேகத்தின்
அடிப்படையில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும்
தீவிரவாதிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் போது
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
மேலும் மூவர்
காயமடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.