மீனில் அதிக அளவில்  மண் கலந்து
சிகரட் புகைத்தவாறு
விற்பனை செய்யும் வியாபாரிகள்
நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள்
கவனம் செலுத்த வேண்டும்
                                                   
பிரதேசத்தின் கஸ்டமான இன்றைய சூழ் நிலையை தமக்கு சாதகமாகப் பாவித்து பொதுச் சந்தையில் மீன் விற்பனை செய்பவர்களில் சிலர் மீனின் நிறையை அதிகரிக்க வேண்டும் என்ற அவாவில் மீனில் மணலை அதிகமாகக் கலந்து விற்பனை செய்ததை இன்று 27 ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள பொதுச் சந்தையில் எம்மால் காணமுடிந்தது.
முஸ்லிம் அன்பரும் தமிழ் அன்பரும் இணைந்து இப்படியான அநியாயமான காரியத்தை மீன் வாங்குபவர்களுக்கு செய்தனர்.
முஸ்லிம் அன்பர் மீனை விற்பனை செய்யும்போது சிகரட் புகைத்தவாறு மீனை தராசில் நிறுத்துக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து மீன் விற்பனையாளர்களிடம் வினவியபோது சட்டத்திற்கு அச்சப்படாவிட்டாலும் இறைவனுக்கு எதுவித பயமுமில்லாதவர்களாக டாம்பிகமாக பதிலளித்தார்கள்.
இப்படி மீனில் அதிக அளவில்  மண் கலந்து விற்பனை செய்பவர்கள் மற்றும் மீன் விற்பனையில் ஈடுபடும்போது புகைத்தல் போன்ற விடயங்கள் குறித்து நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நிறை கூடவேண்டும் என்பதற்காக மீனில் கூடுதலாக ஈர மண்ணைக் கலந்திருப்பதைப் படத்தில் காணலாம்





  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top