வெள்ளை ஆடைகள் மீட்கப்பட்ட சம்பவம்!
பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
மீரிகம
பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைகள் வர்த்தக நிலையமொன்றில்
வெள்ளை நிற
உடைகள் சிலவற்றை
கொள்வனவு செய்த
பெண்கள் மூவரை
அடையாளம் காணும்
நோக்கில் பொது
மக்களின் உதவி
கோரப்பட்டுள்ளது.
கடந்த
19ஆம் திகதி
புர்கா அணிந்து
வந்த குறித்த
மூன்று பெண்களையும்,
அவர்களுடன் வந்த சாரதி ஆகியோர் தொடர்பில்
அடையாளம் தெரிந்தவர்கள்
தமக்கு அறிவிக்க
முடியும் என
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளை
நிற ஆடைகள்
சிலவற்றை சாய்ந்தமருது
பிரதேசத்தில் குண்டு வெடித்த வீட்டில் இருந்து
தேசிய புலனாய்வு
பிரிவு கண்டுபிடித்திருந்தனர்.
கடந்த
19ஆம் திகதி
ஆடை வர்த்தக
நிலையம் ஒன்றில்
9 வெள்ளை ஆடைகள்
மற்றும் மேலும்
சில ஆடைகள்
கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக
29000 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆடை
கொள்வனவு செய்யும்
காட்சி அருகில்
இருந்த சிசிரிவி
கமராவில் படம்
பிடிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது
வீட்டில் இருந்து
தற்போது 5 ஆடைகள்
கிடைத்துள்ளன. ஏனைய 4 ஆடைகளை தேடும் நடவடிக்கைகளை
பாதுகாப்பு பிரிவு இதுவரையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த
ஆடைகளை அணிந்து
சென்று எதிர்வரும்
வெசாக் மற்றும்
பொசோன் போயா
தினத்தில் மக்கள்
நடமாடும் இடங்களில்
அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடலாமென பாதுகாப்பு
பிரிவினர் சந்தேகம்
வெளியிட்டுள்ளனர்.
எனவே
சந்தேநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரியுமாயின்
உடனடியாக பொலிஸ்
அவசர பிரிவுக்கு
அழைத்து தெரிவிக்குமாறு
கோரப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment