தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையவர்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர்
தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்
தெரிவித்துள்ளது.
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் இடமொன்றில்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைக்குண்டுகள்
கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற
தகவலின் அடிப்படையில்
இவைகைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில்ஒருவர்கைது
செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சாய்ந்தமருதில்
தாக்குதல்மேற்கொண்ட தற்கொலைதாரிகள் அந்தத்தாக்குதலுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் தகவல்கள்கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன்
தொடர்புடைய பயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரான் என்பவரின் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கபூர் என்றழைக்கப்படும்
மொஹம்மட்ஷரீப் காத்தான் குடிபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக
விசாரணைகளுக்காக அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
இதேவேளை நீர்கொழும்பு
பிரதிநகர முதல்வர்மொஹமட்அன்சார்
ஆயுதங்கள்பலவற்றுடன்கைது செய்யப்பட்டுள்ளார். வாள்கள் கத்திகள் மற்றும் 38கையடக்கத்
தொலைபேசிகளுக்கான பட்டறிகள்அவரிடம் இருந்துமீட்கப்பட்டுள்ளதாக
பொலிஸ்தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.