விடுதலை புலிகளின் தடயங்கள்!
கைது செய்யப்பட்ட
இருவருக்கும்
16ஆம் திகதி வரை
விளக்கமறியல்
தமிழீழ
விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன் மற்றும் செயலாளர்
எஸ்.கபில்ராஜ் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.
பல்கலைக்கழகத்தில் நேற்று காலை இராணுவம் நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது
குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில்,
நேற்று மாலை வரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்
தடுததுவைக்கப்பட்டிருந்த குறித்த மாணவர்கள் இரவு யாழ்.நீதிவான் நீதிமன்றம் நீதிபதி
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது
இரு மாணவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான்
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment