மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
-பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை
மத்தியில்
ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து
300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக
பதவியேற்க உள்ளார்.
இந்தய
பாராளுமன்ற மக்களவையில்
மொத்தம் 545 ஆசனங்கள் உள்ளன. இதில் 2 ஆசனங்கள்
ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள
543 ஆசனங்களுக்கு தேர்தல் மூலம்
எம்.பி.க்கள் தேர்ந்து
எடுக்கப்படுவார்கள்.
ஜனாதிபதியால்
நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள
543 ஆசனங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து
எடுக்கப்படுவார்கள்.
91 கோடி
வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு
ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான்,
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை
பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தல்
ஏப்ரல் 11 ஆம் திகதி தொடங்கி
மே 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்தன.
பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர்
தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட
நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
இந்த
தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ்
மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே
மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது. பா.ஜ.க.
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்
40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்
25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய
ஜனதா அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
273 தொகுதிகளில் பாரதிய
ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி
ஏற்பட்டது. கடந்த 2 மாத தீவிர
பிரசாரத்தைத் தொடர்ந்து 7 கட்ட வாக்குப்பதிவு நடந்து
முடிந்தது. இந்த தடவை தேர்தலில்
இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம்
வாக்குகள் பதிவானது.
வாக்குப்பதிவு
நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு,
இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு
எண்ணிக்கை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில்
பாரதிய ஜனதா கட்சி மீண்டும்
வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு
முன்னணி நிலவரம் தெரிய வந்தபோது
பா.ஜனதா அதிக தொகுதிகளில்
முன்னிலைப் பெற்று கருத்துக் கணிப்பை
உறுதிப்படுத்தியது.
காலை
8.30 மணிக்கு அதாவது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி
160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை இருந்தது.
9 மணி
அளவில் 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது.
அப்போது பாரதிய ஜனதா கட்சி
236 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ்
கட்சி 96 இடங்களிலும் மாநில கட்சிகள் 73 இடங்களிலும்
முன்னிலை பெற்று இருந்தன.
10 மணி
அளவில் 542 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதில்
பாரதிய ஜனதா கூட்டணி 330 தொகுதிகளில்
வெற்றி வாய்ப்புடன் முன்னிலைப் பெற்றது.
காங்கிரஸ்
கூட்டணி சுமார் 110 இடங்களுடன் பின் தங்கி விட்டது.
மாநில கட்சிகளும் சுமார் 102 தொகுதிகளுடன் தத்தளித்தப்படி இருந்தன.
காங்கிரஸ்
கட்சியும் மாநில கட்சிகளும் சேர்ந்து
ஆட்சி அமைக்க நேற்று மாலை
வரை ரகசிய பேச்சு வார்த்தைகள்
நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்று
வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ்
கட்சி மூத்த தலைவர்களுக்கும், மாநில
கட்சிகளின் தலைவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக
இருந்தன.
காங்கிரசும்,
மாநில கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளை
சேர்த்தால் 212 இடங்களில்தான் முன்னிலையில் இருந்தன.
பிற்பகல்
தெளிவான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட போது
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய
ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் இமாலய வெற்றியை
நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. பாஜக
மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.
பாரதிய
ஜனதா கட்சி கடந்த தேர்தலை
விட இந்த தேர்தலில் அதிகப்படியான
வெற்றியை பெறும் சூழ்நிலை உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில்
பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட
முறையில் 282 இடங்களில் வெற்றி கிடைத்து இருந்தது.
இந்த
தடவை பாரதிய ஜனதா தனிப்பட்ட
முறையில் 289 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம்
பா.ஜனதா கூட்டணி மீண்டும்
இமாலய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது
குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ்
கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது
44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.
இந்த தடவை அந்த எண்ணிக்கை
இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில கருத்து
கணிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில்
வெற்றி கிடைக்கும் என்று கூறியிருந்தது.
ஆனால்
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 51 தொகுதிகளில்தான்
காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்
நிலையில் உள்ளது.
421 தொகுதிகளில் போட்டியிட்ட
காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் கூட வெற்றி பெற
முடியாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக ராகுலும்,
பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தும்
காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த
தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக வெறும் 6 அல்லது 7 இடங்களே கிடைக்கும் சூழ்நிலை
உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 95 முதல் 100 இடங்கள் கிடைக்கும் நிலை
உள்ளது.
பாரதிய
ஜனதா கூட்டணி சுமார் 350 இடங்களில்
முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும்
பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது
உறுதியாகி விட்டது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள்
தேவை
எனவே
நரேந்திர மோடி மீண்டும் பிரதமர்
ஆகிறார். பதவி ஏற்பு விழா
அடுத்த வாரம் நடைபெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment