4000 பெண்களுக்கான கருத்தடை
விவகாரம்!
இதில் உண்மை இருக்குமா?
அரச மருத்துவ சங்கம் என்ன
செய்கிறது?
விசாரணைகள் நடத்தப்படுவது
உண்மையா?
நாடாளுமன்ற உறுப்பினர்
மரிக்கார் கேள்வி
தீவிரவாத
ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத முதுகெலும்பில்லாத அரசாங்கமே எமது
அரசாங்கம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்
இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு 4000 சிங்கள தாய்மாருக்கு வைத்தியர்
ஒருவர் கருத்தடை செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில்
கருத்துரைக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு நாடாளுமன்ற
உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மகப்பேற்று
கட்டுப்பாட்டை சிசேரியன் மூலம் செய்த மருத்துவர் ஒருவர் குறித்து ஊடகம் ஒன்று
செய்தி வெளியிட்டது.
வைத்தியர்
குறித்து விசாரணைகள் நடப்பதாக கூறினாலும் நான் இதுபற்றி தேடியபோது அப்படி எந்த
விசாரணைகளும் நடப்பதாக தெரியவில்லை.
நான்காயிரம்
சிசேரியன் சிகிச்சைகள் ஒரு வைத்தியர் செய்ய வேண்டுமாயின் ஒரு நாளைக்கு ஒரு
சிசேரியன் சிகிச்சை என்று பதினோரு வருடம் அவர் செய்திருக்க வேண்டும்.
இதில்
உண்மை இருக்குமா? அரச மருத்துவ சங்கம் என்ன செய்கிறது? ஏன் மௌனம் காக்கின்றனர்.
இப்படியான
செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத
முதுகெலும்பற்ற நிலையில் தான் எமது அரசு இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம். மரிக்கார்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment