புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா
மட்டக்களப்பு - தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்
8A மற்றும் 1B சித்தியினை பெற்றிருந்தவராம்
அண்மையில்
இலங்கையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு
தாக்குதல் தொடர்பில்
நாள்தோறும் பல்வேறு தகவல் வெளிவருகின்றன.
இந்நிலையில்
தாக்குதல் இடம்பெற்ற
நான்காவது நாளில்
தற்கொலைதாரிகள் என தெரிவித்து பொலிஸார் சிலரது
புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த
புகைப்படங்களில் புலஸ்தினி ராஜேந்திரன் என்ற தமிழ்
பெண் ஒருவரின்
பெயரும் இடம்பெற்றிருந்தது.
அந்த
வகையில் குறித்த
யுவதி மட்டக்களப்பு
- தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி
தொடர்பில் அவரின்
தாயார் கருத்து
தெரிவிக்கையில்.
எனது
மகள், கல்வி
பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த
பெறுபேற்றினை பெற்றிருந்தார். அவர் சாதாரண தரத்தில்
8A மற்றும் 1B சித்தியினை பெற்றிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்
தனது மகள்
முஸ்லிம் இளைஞர்
ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டு மதம்
மாற்றம் செய்யப்பட்டதாகவும்,
அதன் பின்னர்
இடம்பெற்ற சம்பவங்கள்
குறித்தும் யுவதியின் தாயார் செய்தி சேவை ஒன்றுக்கு
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment